Tuesday, September 11, 2012

பாகன் விமர்சனம்

 ரொம்ப நாளா எங்கடா  போன ஆள காணோமேன்னு முகபுத்தகம், ட்விட்டர், சாட் இப்டி எங்கயுமே விசாரிக்காத நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. மேதை, ஒரு நடிகையின் வாக்குமூலம், அம்புலி, உடும்பன், இஷ்டம், சகுனி இப்புடி சில நல்ல படங்களை பார்க்க வேண்டிய கட்டாயதுல நான் என்னையே தொலைச்சுட்டு இப்போதான் திரும்பியும்  என்ன கண்டு பிடிச்சுட்டு வந்திருக்கேன்.

இப்போ கடைசியா நான் பார்த்த படம் பாகன். சரி அதை பத்தி கொஞ்சம்  கிறுக்குவோமேன்னு் இந்த பக்கம் வந்தேன். இதுக்கு முன்ன சொன்ன ஆறு படத்துல அஞ்சு  படத்த தியேடர்ல்ல பார்த்து  சோலபொறி வாங்க கூட காசு இல்லாம போனதால பாகன டிக்கெட் எடுக்காம 5 பைசா செலவில்லாம பாக்கணும்னு திட்டம் போட்டு பார்த்தேன்[எப்புடின்னுலாம் கேக்க கூடாது].



பென்ஸ் கார்ல்ல வர்ற ஹீரோ சைக்கிள்ள தேடி டென்சனா அதே பென்ஸ் கார்ல்ல போகும் போதே சைக்கிள் வேற கதை சொல்ல ஆரமிச்சுட்டு.  சைக்கிலும் ஸ்ரீகாந்தும் லவ் பண்றத பாத்து இந்த சைக்கிள்தான் ஜனனியோன்னு பயந்துட்டேன். ஏன்னா இபோதன  ஹீரோவ ஈ ன்னு காட்டி ஒரு படம் செம ஹிட்ல அதுமாதிரி ஜனனிய சைக்கிளா காட்டி கல்லா கட்ட போறாங்களோன்னு பயந்துட்டேன்.

 அப்பா சோடா சுத்தி சம்பதிகுற காசுல ஊரு சுத்துறார் ஹீரோ அவர் கூட இன்னும் இரண்டுபேர் பாண்டி, சூரின்னு. நண்பேண்டா னு சொல்லிகிட்டே அம்பானி ஆகணும்ன்னு மூணுபேரும் ஊரசுத்தி ஒரு பழைய ஐடியாவ பிடிக்குறாங்க. அதான் அவுங்க ஊருலயே [பொள்ளாச்சில] பெரிய பணக்காரன் பொண்ண லவ்வி கவ்வனுமாம். ஹப்பாடா சைச்ளுக்கு பதில ஒரு பொண்ணு வருதுன்னு  சந்தோசப்பட்டா சைக்கிளோட வேகமா பூவெல்லாம் உன் வாசம் ஜோதிகவோட அதிகமா வாங்குன காசுக்கு மேல ஒரு அம்முனி ஆடுச்சு ஹீரோயினோட தங்கசிக்கே [ஸ்ரீகாந்த் இடுப்புக்கு இருக்குங்குறதால  தப்பா நினைச்சுட்டேன்]   இப்படி ஒரு டான்சான்னு ஷாக் ஆகிட்டேன். அப்புறம் அந்த பொண்ணு சைக்கிள் ஓட்டுரத பாத்து இதன் நம்ம ஊரு ஹீரோயின்னு முடிவுக்கு வந்துட்டேன்.

   இப்போ ரெண்டுபேருக்கும் லவ்வு, அதுல ஒரு பிரிவு, ஹீரோ ஊரைவிட்டு ஓடுறது அப்புறமா ஒருவழியா திருப்பூர் போய் அங்க ஒரு அழகான[ஹீரோயின் அக்கா மாதிரி] ஒரு பொண்ணு கம்பெனில fake ப்ரோபைல் கொடுத்து tea கொடுக்குவேலைல மாசம் 7000 சம்பளத்துல வேலைக்கு சேர்ரதுன்னு கதை நகருது  . ஆறே மாசம் சம்பாதிச்சுட்டு அம்முனிய பாக்கலாம்ன்னு கிளம்பும்போது அந்த அம்முனியே இங்க வருது. இவுங்க ரெண்டு பேரும் எப்டியும் செர்ந்திருவங்கன்னு எல்லோருக்கும் தெரியும் அதுனால அது கிளைமாக்ஸ் இல்லை ஆனா காணாம போன சைக்கிள் ஒன்னு கதை சொல்லிக்கிட்டு இருக்கே அதுக்கு என்ன ஆகுதுங்குறதுதான் கிளைமாக்ஸ்.

Saturday, November 26, 2011

முல்லைப்பெரியாறு அணை உடைந்துவிடுமோ என்ற பயத்தில் இரவில் தூக்கம் வருவதில்லை. இப்போது செழிப்பாக இருக்கும் மதுரை உள்பட 5 மாவட்டங்கள் முல்லைப்பெரியாறு அணை உடைந்தால் பாலைவனம் ஆகிவிடாதா என்று கேரள பாசனத்துறை அமைச்சர் ஜோசப் உருக்கத்துடன் கேள்வி எழுப்பினார்.


The Mullai Periyar DAM Problem from Veera Elavarasu on Vimeo.

தூக்கம் போகும்னு தெரிஞ்சுதான இந்த வீடியோவ முன்னாடியே விட்டுருக்கோம். உண்மையாவே இவரு தூக்கம் போனதுக்கு காரணம் அணையா? அந்த விமான ஜல்சா கேஸ் முடிஞ்சுதான்னு விசாரிக்கனும்பா...


தமிழக பொறியாளர்கள் எவ்வாறு இந்த பிரச்சனையின் உண்மை நிலையை சொல்லி இருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளவும்...



Sunday, September 18, 2011


ஷாரூக்கின் இந்த ரா-ஒன் படம் ரஜினியின் எந்திரன் படத்தின் அப்பட்டமான காப்பி என்றெல்லாம் செய்திகள் உலா வந்த நிலையில், எந்திரன் வேறு, ரா ஒன் வேறு. நாங்கள் ரஜினி மீது பெரும் மரியாதை வைத்துள்ளோம்.அவரை கவுரவிக்கும் விதத்தில் காட்சியும் வைத்துள்ளோம் என்று ஷாருக்கான் கூறியிருந்தார்.





இந்த நிலையில் ரா-ஒன் படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் தோன்றப் போவதாக மும்பை பத்திரிகைகள் பரபரப்பு செய்தி வெளியிட்டு உள்ளன.



இதுபற்றி கூறப்படுவதாவது:

ரா ஒன்னில் ஷாரூக்கானை பெரும் ஆபத்திலிருந்து காக்கும் ஒரு சூப்பர் மேன் வேடத்தில் நடிக்க ரஜினி ஒப்புக் கொண்டுள்ளார்.



இதற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அடுத்த மாதம் (அக்டோபர்) 4-ந்தேதி நடக்கிறது. ஷாருக்கான் வில்லன்களிடம் சண்டை போடும் போது ஒரு கட்டத்தில் நிராயுதபாணியாக நிற்பார். அவர் உயிரை வில்லன்கள் பறிக்க ஆயத்தமாகும் தருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி ஒரு சூப்பர் காரில் தனக்கே உரிய ஸ்டைலில் சர்ரென்று வந்து நிற்பார்.



அவரது கார் வில்லன்களின் ஆயுதங்களை தன்னுடன் ஈர்த்து ஷாருக்கானை காப்பாற்றும். அப்போது ஷாரூக்கின் உடனிருக்கும் கதாநாயகி கரீனா கபூர் யார் இவர் என்று ரஜினியை பார்த்து கேட்பார். உடனே ரஜினி தனக்கே உரிய பஞ்ச் வசனம் பேசியடி காரிலிருந்து இறங்குவாராம். அவரை ஷாரூக்கான் மிகுந்த மரியாதையுடன் அறிமுகப்படுத்துவது போன்று இக்காட்சி எடுக்கப்படுகிறதாம்.

Tuesday, September 6, 2011

"இன்டர்நெட்", "ப்ரௌஸிங்", "சாட்டிங்" போன்ற வார்த்தைகள் தான் இப்போது பெரும்பாலான இளைஞர்/ஞிகளால் பேசப்படுபவை. ஒவ்வோவ்று வீட்டிலும் இருக்கும் இணைய இணைப்புகள் மற்றிம் ஒவ்வொரு தெரு முனையிலும் முளைக்கும் இன்டர்நெட் சென்டர் இதற்குச் சான்று. இதில் சாட்டிங் என்பது கம்பியூட்டர் முன் உட்கார்ந்து ஊர், பெயர், முகம் தெரியாதவரோடு நட்பு கொள்வதாகும். தொலைவில் உள்ள நண்பர்களோடு மற்றும் உறவினரோடு தொடர்பு கொள்வதில் இது உதவினாலும் அதிகப் படியாக இது முன் பின் தெரியாதவரோடு பேசவே பயன்படுத்தப் படுகிறது. 

அறிமுகங்கள் பல தரும் இந்த சாட்டிங்கை அளவோடு பயன்படுத்துவது , தனிப்பட்ட தகவல்கள் பரிமாறுவது போன்றவற்றில் கவனமாக இருக்க வேண்டும்.

இங்கு உண்மையான நட்பு அமைந்துவிட்டால் அற்புதமே ஆனால் அமைவது என்பது மிக மிக அரிது...இங்கு நடக்கும் இன்னொரு விஷயம் காதல், உங்களைக் காதலிக்கும் அந்த 25 வயது நபர் நிஜ வாழ்வில் 45 வயதான 3 குழந்தைகளின் தந்தையாக/தாயாக இருக்கலாம். [நான் இணையத்தில் ஒருவனை கடந்த வருடம் அண்ணா என்றேன், இந்த வருடம் அவனுக்கு ஒருவயது குறைந்து விட்டது அவன் என்னை அண்ணா என்கிறான்...lol]. 

இதை கூட புரிந்துகொள்ளும் சமயோகித புத்தி இல்லாதவர்களா நாம்? அப்பிடி யோசிப்பவர்களுக்கு எதிர் முனையில் இருப்பவர் உங்களை விட புத்திசாலியாக இருக்கலாம் என்பதை மறந்துவிடாதிர்கள்.[avvai paati], அவர்கள் சொல்வதை கேட்பதில் தவறில்லை ஆனால் அதை வைத்து முடிவெடுத்தால் நிச்சயம் ஏமாற்றம் தான். 

சாட்டிங்கில் நல்ல நண்பர்கள்/காதலர்கள் யாருக்கும் கிடைத்த கதைகளே கிடையாதா? உண்டு. ஆனால் அவை மிகக் குறைவு.



நிழல்களை நிஜம் என்று நம்பி விடாதீர்கள்.

Tuesday, July 26, 2011

குட்டி கதை


குட்டி கதை தான்: 

மம்மி என்னக்கு நாளைக்கு லீவ் வேணும் - கண்ணை கசக்கி அழுது அடம் பிடித்த ஷோபி குட்டி காதை திருகி . சும்மா சும்மா லீவ் என்று திட்டி ஸ்கூலில் அனுப்பி விட்டு வெங்காயம் நறுக்கி கொண்டே பார்த்தாள் பத்திரிகை செய்தி -->





--> "ஜெயலலிதா மனு : முதல்வர் பொறுப்பில் இருப்பதாலும், இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுவருவதாலும் நீதிமன்றத்தில் ஆஜராக இயலாத சூழ்நிலை உள்ளது" மம்மியே கசக்கினாள் கண்ணை ..

Sunday, July 24, 2011


கடந்தவாரம் சமச்சீர் கல்விக்கு ஆதரவாக நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு குறித்து பலரும் பேசியிருப்பர். இந்த தீர்ப்பு என்னை ஈர்க்கக்காரணம் தரமான கல்வி எனும் பெயரில் நடை பெரும் கல்விக்கொள்ளைக்கு முற்று ப்புள்ளி வைக்க ஒரு தொடக்கமாக கருதுவதே.

கல்வி என்று தனியார்மயமாக்கப்பட்டதோ அன்றே நாம் மக்களுக்கும் நாட்டிற்கும் அநீதி இழைக்கப்பட்டதாகவே எண்ணுகிறேன். இதில் கொடுமை என்னவெனில் பல சாராய வியாபாரிகள் இன்று கல்வி வள்ளல்கள் ஆகி கல்விநிலையங்கள் நடத்துகின்றனர் ஆனால் அரசோ சாராயக்கடை நடத்துகிறது. சாராயக்கடை நடத்தமுடியும் அரசால் தரமான கல்வி மற்றும் மருத்துவ நிலையங்களை நடத்தமுடியாதது ஏன்? சமச்சீர் கல்வியை மறுப்பதன் மூலம் மறை முகமாக அரசு பள்ளிகாளை மறைமுகமாக தரம் தாழ்த்தி தனியார் கல்வி நிறுவனங்கள் [பள்ளி மற்றும் கல்லூரிகள்] மூலம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தேவையான உழைப்பாளிகளை உருவாக்கிக்கொடுக்கும் செயல்தான்.

கல்விகடன் எனும் திட்டம் பற்றி கேள்விப்பட்டவுடன் எந்த அளவு மகிழ்ந்தேனோ அதை விட இன்று அத்திட்டம் குறித்து வருத்தப்படுகிறேன். இதன் காரணம் இத்திட்டம் மாணவர்களைவிட கல்வி வியாபாரிகளுக்கு சரியான சமயத்தில் பணம் கிடைக்க செய்யப்பட்ட ஏற்பாடாகவே எண்ணுகிறேன்.சுலபத்தில் கடன் கிடைப்பதில்லை என்பது ஒருபுறம், கடன் கிடைத்து படித்து முடித்தால் வேலை கிடைப்பதில்லை என்பது மறுபுறம். ஆனால் கடன் மட்டும் நம் நம் மீது ஏற்றப்படுகிறது. இந்நிலைதான் குழந்தை தொழிலாளர்களுக்கான உற்பத்திமையமாக இந்தியாவை மாற்றும் மூல காரணமாக இருக்கிறது.

1986ம் ஆண்டு குழந்தைத் தொழிலாளர் (தடை-சீரமைப்பு) சட்டம் இயற்றப்பட்டது.இச்சட்டம் அபாயகரமான தொழில்கள் அல்லது குழந்தைகளின் கல்வியைப் பாதிக்கும் தொழில்கள், குழந்தைகளின் உடல், மனம், பழக்கவழக்கத்தில் அபாயம் தரும் தொழில்கள் மற்றும் சமூகமேம்பாட்டைத் தடுக்கும் தொழில்களில் குழந்தைகள் ஈடுபடுவதை தடுக்கவேண்டும் என்று கூறுகிறது. ஆனால் மறுபுறம் அரசே மறைமுகமாக கல்விகொல்லையை ஊக்குவித்தும்   சமசீர்கல்வி தட்டத்தை எதிர்த்தும் செயல்படுவதின் மூலம் மறைமுகமாக குழந்தை தொழிலாளர்களை உற்பத்தி செய்வதை எங்கு சொல்லிவருத்தப்படுவது.



ஏதோ நம்மால் முடிந்த பின்வரும் உதவியை செய்வோமே,

தமிழகத்தில் எங்கேனும் குழந்தைகள் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற அவல நிலையைக் கண்டால் அல்லது குழந்தை தொழிலாளர்களை கண்டாலோ உடனே “RED Society” யின் 9940217816 என்ற எண்ணில் அழையுங்கள். அவர்கள் அக்குழந்தைகளின் கல்விக்கு வழி வகுப்பார்கள்.






Thursday, June 23, 2011

இந்த மெழுகுவர்த்தி செய்ய கத்துக்கவா 176000கோடி ஊழல் ... 

அது குடிசை தொழில் இல்லையா???





 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக எம்பி கனிமொழி உபயோகமாக நேரத்தை செலவிடும் வகையில் சக கைதிகலுடன் சேர்ந்து அங்கு மெழுகுவர்த்தி செய்யக் கற்று வருகிறார் என்று சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.